பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
ஆந்திரத்தில் 10 நாள்களில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு 2 பேர் பலி
ஆந்திரத்தில் 10 நாள்களில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் திங்கள்கிழமை கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு கமலம்மா பலியானார்.
10 நாள்களுக்கு முன்பு இதே பாதிப்பால் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 10 வயது சிறுவனும் பலியானான்.
தற்போது 17 ஜிபிஎஸ் பாதிப்புகள் மாநிலத்தில் உள்ளன. லட்சத்தில் இரண்டு பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இது சாதாரணமானது. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 267 ஜிபிஎஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
நெரிசல் சம்பவம்: சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் தில்லி ரயில் நிலையம்!
ஆண்டின் முதல் பாதியில் 141 பாதிப்புளும், இரண்டாம் பாதியில் 126 பாதிப்புகளும் பதிவாகியிருந்தன.
சராசரியாக ஒரு மாதத்திற்கு 25 பாதிப்புகள் கண்டறியப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் பெரும்பாலானவை வழக்கமான சிகிச்சையின் மூலம் கையாளப்படலாம் என்று தெரிவித்தார்.
ஜிபிஎஸ் தொற்று அண்மை காலமாக மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் தீவிரமாக பரவிவருகிறது.