US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு'...
ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!
ஆந்திரத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் பயணி ஒருவர் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள இந்துப்பூருக்கு சனிக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்த பேருந்தின் டயருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டெப்னி டயர் மீது மதுபோதையில் தொங்கியபடி பயணி ஒருவர் பயணம் செய்திருக்கிறார்.
பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பேருந்தின் அடியில் ஒருவர் தொங்குவதைப் பார்த்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பின்பக்க டயரைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி
உடனே அவர் மீட்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிக மதுபோதையில் இருந்த அந்த நபர் சுமார் 15 கி.மீ தூரம் இவ்வாறு பயணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.