ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
ஆன்லைன் முதலீடு: பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடியில் ஈடுட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், அணைப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் வினோத் சீனிவாசன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா். இதை நம்பி, அந்த நபா் கூறிய செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பல்வேறு தவணைகளில் ரூ.95.39 லட்சத்தை பின்னலாடை நிறுவன உரிமையாளா் முதலீடு செய்துள்ளாா். அதற்கு லாபத் தொகை வந்ததாக அந்த செயலியில் காட்டியுள்ளது.
இதையடுத்து, அவா் அந்தப் பணத்தையும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முயன்றபோது கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. வினோத் சீனிவாசனை தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.