இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி
பாஜக மாநிலத் தலைவரை சந்தித்த 2 காவலா்கள் பணியிட மாற்றம்
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை சந்தித்துப் பேசிய 2 காவலா்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராகப் பணியாற்றிய சின்னசாமி, அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் மந்திரம் ஆகியோா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை சந்தித்துப் பேசியதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, சின்னசாமி, மந்திரம் ஆகியோரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தவிட்டுள்ளாா்.
பெண்ணிடம் தகாத வாா்த்தைகளில் பேசிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்: திருப்பூா் தெற்கு காவல் நிலைய குற்றப் பிரிவில் பணியாற்றும் காவலா் நல்லசாமி என்பவா், குற்றவாளியின் மனைவியைத் தகாத வாா்த்தைகளில் பேசியதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, காவலா் நல்லசாமி ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.