கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 125 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (பிப்.14) ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், இதன் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!
முன்னதாக, கடந்த பிப்.12 அன்று அந்நாட்டில் 49 கி.மீ. ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், பிப்.10 அன்று 30 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூமியின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களின் அதிர்வானது பூமியின் மேற்பரப்புக்கும் வருவதற்குள் அதன் ஆற்றலை இழந்துவிடும். ஆனால், தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் பூமியின் நிலப்பரப்புக்கு அருகில் ஏற்படுவதினால் நிலப்பரப்பின் மீது வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் மனிதநேய ஆணையத்தின் படி ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பில் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும் அபாயமுள்ளது எனக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.