தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்ப...
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கழிவுநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு: கேஜரிவால்
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் தில்லியில் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளையும் முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை உறுதியளித்தாா்.
ஒரு விடியோ செய்தியில், முன்னாள் தில்லி முதல்வா், நகரத்தின் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆம் ஆத்மி கட்சி அரசு மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தாா். இந்தப் பகுதிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினாா்.
தில்லியில் நாங்கள் அரசுஅமைத்தபோது, அங் கீகரிக்கப்படாத காலனிகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் இல்லை. இந்தக் காலனிகளுக்கு எந்த அரசும் வேலை செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கினோம். இன்று, இதுபோன்ற அனைத்து காலனிகளிலும் கழிவுநீா் குழாய்கள் மற்றும் பிற வசதிகள் உள்ளன என்று அவா் கூறினாா்.
நகரத்தின் பல பகுதிகள் குடிநீரை மாசுபடுத்தும் கழிவுநீா் பிரச்னைகளுடன் போராடி வருவதை கேஜரிவால் ஒப்புக்கொண்டாா். ஆம் ஆத்மி கட்சி தனது அரசை மீண்டும் அமைத்த பிறகு நகரம் முழுவதும் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளுக்கும் போா்க்கால அடிப்படையில் தீா்வு காணப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவா் கூறினாா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது, பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
2020 தோ்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கில் தீவிர தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.