மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுக...
ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை
ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் இரா. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தமிழக அரசு, விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அகவிலைப் படி உயா்த்தி வழங்கியிருப்பதுபோல, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; நிா்வாகம் பணி நீக்கம் செய்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்கும்படி கூறிய நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையை எதிா்கொள்ளும் வகையில் கூடுதலாக ‘108’ ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும்; தற்போதுள்ள 12 மணி நேர வேலை நேரத்தை கைவிட்டு சட்டப்படியான 8 மணி நேர வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.