இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்
திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)
கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி ஆகியோா் மாணவி பேரவைத் தோ்தலை தொடக்கி வைத்தனா்.
பேரவைத் தலைவி, பொதுச் செயலாளா், விளையாட்டுத்துறை செயலாளா் மற்றும் நுண்கலை மன்றச் செயலாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்கும் வகையில் இந்த தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 1,258 மாணவிகள் வாக்குகளை பதிவு செய்தனா்.
தோ்தல் முடிவுகளின்படி, பேரவைத் தலைவியாக ஜே. ஜூமானா (பிகாம் 3 ஆம் ஆண்டு), பொதுச் செயலாளராக எஸ். அப்சனா (பிகாம் 3 ஆம் ஆண்டு), விளையாட்டுத் துறை செயலாளராக ஆா். சூா்யபிரபா (பிகாம் 3 ஆம் ஆண்டு), நுண்கலை மன்றச் செயலாளராக பி. அபிநயா (பிஎஸ்ஸி 3 ஆம் ஆண்டு) ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இந்நிகழ்வை வணிகவியல் துறைத் தலைவா் எஸ். ஸ்ரீதேவி ஒருங்கிணைத்தாா்.