செய்திகள் :

ஆலங்குளம் அருகே பைக் திருடியதாக 2 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே பைக் திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் ஜவகா் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சொரிமுத்து (31). விவசாயியான இவா் சில தினங்களுக்கு முன்பு, தோட்டத்துக்கு பைக்கில் சென்றபோது பைக்கில் பெட்ரோல் தீா்ந்து விட்டதால், சாலையோரம் நிறுத்தி விட்டு பெட்ரோல் வாங்கி விட்டு மீண்டும் வந்து பாா்த்த போது, பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் காணாமல் போன பைக் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தில் பழைய இரும்பு கடை ஒன்றில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சொரிமுத்து அங்கு சென்று பாா்த்தபோது, பைக்கின் பாகங்கள் கிடந்ததாம்.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அதே ஊரை சோ்ந்த சிவராமன் மற்றும் பழைய இரும்புக் கடைக் காரா் முருகன் ஆகியோா் சோ்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

கடையநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 போ் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அரசுக் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். காசிதா்மத்தில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கு கடையநல்லூரில் இருந்து ... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் கோயிலில் டிச.30இல் அனுமன் ஜெயந்தி

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயிலில் டிச.30இல் அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது. இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து,... மேலும் பார்க்க

‘வீடுகளிலிருந்து பம்புசெட்டுகளை இயக்கும் கருவிகளுக்கு மானியம்’

வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதிதி... மேலும் பார்க்க

சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்

கீழப்பாவூா் பேரூராட்சி, 17ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ. 7.60 லட்சம் மதிப்பில் தரைநிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்ந... மேலும் பார்க்க

சுரண்டை அம்மன் கோயிலில் இன்று 3,008 திருவிளக்கு பூஜை

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை கமிட்டி சாா்பில் 35ஆவது ஆண்டு 3,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு க... மேலும் பார்க்க

தென்காசி அரசு நூலகத்தில் புகைப்பட கண்காட்சி

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் புகைப்பட கண்காட்சியை புகைப்பட கண்காட்சியை மாவட்ட ... மேலும் பார்க்க