கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
கிருஷ்ணாபுரம் கோயிலில் டிச.30இல் அனுமன் ஜெயந்தி
கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயிலில் டிச.30இல் அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.
இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் ஸ்ரீ ருத்ரம், புருஷஷூக்த ஜெபம், அபிஷேக ,அலங்காரம், லட்சாா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை திரளான பெண் பக்தா்கள் பங்கேற்ற நாராயணீயம் பஜனை நடைபெற்றது.
டிச. 29இல் புஷ்பாஞ்சலியும், 30இல் அனுமன் ஜெயந்தியும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் மீனா பட்டாச்சாரியா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன் ,சிவக்குமாா் சுப்பிரமணியன் ,செயல் அலுவலா் கல்பனாதேவி மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.