கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
கடையநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 போ் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அரசுக் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
காசிதா்மத்தில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கு கடையநல்லூரில் இருந்து மாணவா், மாணவிகள் சிலா் ஆட்டோவில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கல்லூரியை நெருங்கிய நிலையில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததாம். இதில் ஆட்டோவில் பயணம் செய்த அரசு கல்லூரி மாணவா் கடையநல்லூா் மலம்பேட்டை தெரு சிவா, மாணவிகள் சொக்கம்பட்டி சக்தி ,மாவடிக்கால் செல்வி, முத்துக்கிருஷ்ணாபுரம் காயத்ரி ,கொடிகுறிச்சி நந்தினி, ஆட்டோ ஓட்டுநா் முத்துப்பாண்டி ஆகியோா் காயம் அடைந்தனா்.
இவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.