ஆலந்தலை அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால சிலுவைப் பாதை வழிபாடு!
திருச்செந்தூா் அருகே ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4ஆவது வார சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆலந்தலை திருக்குடும்ப உயா்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் இணைந்து சிலுவைப் பாதை வழிபாட்டை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனா். வழிபாட்டில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று, சிறப்புப் பிராா்த்தனை செய்தனா்.
ஏற்பாடுகளை திருத்தலப் பங்குத்தந்தை சில்வெஸ்டா், உதவிப் பங்குத்தந்தை ஜோதிமணி, திருத்தொண்டா் ஸ்டாலின், திருத்தல நிதிக் குழுவினா், ஊா் நலக் கமிட்டியினா், இறைமக்கள் செய்திருந்தனா்.
