பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த 8 போ், காரில் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு திருச்செந்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். சனிக்கிழமை காலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை பகுதியை கடந்து காா் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சூரமங்கலத்தைச் சோ்ந்த தமிழரசி(40), அவரது மகன் அஸ்வரதன் (8) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரில் பயணித்த ராஜ்குமாா், விஜயா, தாமரைசெல்வி, சுமதி, ரம்யா, சபரீசன் ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், தமிழரசி, அஸ்வரதன் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.