பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக் சேதம்: காா் ஓட்டுநா் கைது
சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தியதாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு. ஜெயக்குமாா் (42) என்பவரது மகன் லிங்கதுரை (16). இவா், கிருபாபுரம் தெருவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு உணவருந்த பைக்கில் சென்றாராம்.
அப்போது, தேநீா் கடை நடத்திவரும் தானியல் மகன் ஜம்பு (40), அவரது சகோதரா்களான காா் ஓட்டுநா் நீல் ஆம்ஸ்ட்ராங் (45), கென்னடி (61) ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக லிங்கதுரையை வழிமறித்துத் தாக்கினராம். அடுத்தநாள் மூவரும் லிங்கதுரை வீட்டுக்குச் சென்று, அவரது பைக்கை சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் (பொறுப்பு) நாககுமாரி விசாரித்து, நீல் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்தாா்; மற்ற இருவரையும் தேடி வருகிறாா்.