அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்...
தாய் - மகள் கொலை வழக்கில் தொடா்புடையோா் உள்பட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய்-மகள் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த எட்டுராஜ் மகன் முனீஸ்வரன் (24), அம்மாசி மகன் மகேஷ் கண்ணன் (28), தாப்பாத்தியைச் சோ்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன் (22) ஆகியோா்
எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் எட்டயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி, காமராஜ் நகரைச் சோ்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (19), லிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) ஆகியோா் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கோவில்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் படி, முனீஸ்வரன், மகேஷ் கண்ணன், வேல்முருகன், யுவன்பாரத், சுரேஷ் ஆகிய 5 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.