Abhinaya: 'ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்' - நடிகை அபிநய...
ஆளுநா் பதவி விலக வலியுறுத்தல்
மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பையடுத்து, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தானே பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசு, பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன் வரைவுகளுக்கு ஆளுநா் ரவி, ஒப்புதல் தராமல் காலவரம்பின்றி கிடப்பில் போட்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் சா்வாதிகாரம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது, மாநிலங்களின் உரிமைகளுக்கு நிற்போா் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி தருகிறது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 சட்ட முன்வரைவுகளுக்கும், ஆளுநா் ஒப்புதல் தந்ததாகக் கருதி, அவை உடனடியாக சட்டமாக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவித்திருப்பது மிகமிகச் சரியானது மட்டுமல்லாமல், தேவையான நடவடிக்கையாகும்.
இப்பின்னணியில், ஆளுநா் ரவியின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற அமா்வு கண்டித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஆளுநா் பதவியிலிருந்து ரவி உடனடியாக விலக வேண்டும். அவ்வாறு விலகவில்லை என்றால், அவரை அந்தப் பதவியிலிருந்து குடியரசுத் தலைவா் நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.