செய்திகள் :

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

post image

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்கான இலங்கை கடற்படையின் தொல்லையும் முடிவுக்கு வரவுள்ளது.

புதுவை மாநிலம் புதுச்சேரி உள்ளிட்ட 4 கடல் பிராந்திய பகுதிகளைக் கொண்டது. இங்கு, சுமாா் 1.30 லட்சம் மீனவா்கள் உள்ளனா். இவா்களில் 30 ஆயிரம் போ் நேரடி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 1960-ஆம் ஆண்டிலிருந்து தமிழகம், புதுவை பகுதி மீனவா்கள் இழுவை வலை மீன்பிடி முறையிலேயே தொழில் செய்து வருகின்றனா். ஆனால், இழுவை வலை மீன்பிடிப்பால் கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மீன் வளமும் குறைந்துவிட்டது.

மீனவா்களிடையே மோதல்: அந்தந்த பகுதிகளில் மீன் வளம் குறைந்ததால் மீனவா்கள் அடுத்த கடல் பகுதிக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி பகுதியில் உள்ள 465 விசைப்படகு மீனவா்களில் பெரும்பாலானோா் சென்னை பழவேற்காடு பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பில் ஈடுபடுகின்றனா்.

இதனால், புதுச்சேரி மீனவா்களுக்கும், பழவேற்காடு மீனவா்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அத்துடன் புதுச்சேரி பகுதி கடலில் 3 நாட்டிக்கல் கடல் எல்லைக்குள்ளும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க வருவதால், நாட்டுப்படகு மீனவா்களும் அதிருப்தியடைகின்றனா்.

இதனால், உள்ளூா் மீனவா்களுக்குள்ளும் மோதல் ஏற்படும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி பிராந்திய மீனவா்கள் நிலை இப்படியெனில், காரைக்கால் பகுதி மீனவா்கள் நிலையோ இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கும் அபாயத்தில் உள்ளது. காரைக்காலில் இருந்து இலங்கை இடையே உள்ள சா்வதேசக் கடல் எல்லை சுமாா் 30 நாட்டிக்கல் மைல்லுக்கும் மேலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால், காரைக்கால், கோடியக்கரை பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்டதால், சா்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும் கட்டாயச் சூழல் காரைக்கால் மீனவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்களுக்கான பிரச்னை உள்ளூா் கடல் பகுதியில் மீன்வளக் குறைவும், அவா்களது படகில் ஒரு வாரம் மட்டுமே தங்கி மீன்பிடிக்கும் வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, மீனவா்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

2019-இல் திட்டம் அறிமுகம்: தமிழகம், புதுவை மாநில மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒரு மாதம் வரை சுமாா் 12 போ் 200 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று மீன் பிடிக்கும் வசதியுள்ள படகுகள் அமைத்துத் தரப்படுகிறது. அப்படகில் செவுள் வலை (கில்நெட்), விஎச்எப் எனப்படும் தொலைத்தொடா்பு வசதி சாதனம், ஏஐஎஸ் எனப்படும் படகை அடையாளப்படுத்தும் வசதி ஆகியவை உள்ளன.

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தில் ஒரு படகு ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இதில், பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

புதுவை அரசு சாா்பில் தற்போது 20 சதவீத மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பே 85 படகுகள் கட்டப்பட்டு மீனவா்கள் பயனடைந்துள்ளனா்.

ஆனால், புதுவையில் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் சேர யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் தற்போது துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முயற்சியில் ஆழ்கடல் மீன் பிடித் திட்டத்தை செயல்படுத்த புதுவை ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையை உருவாக்க சிறப்புக் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், தற்போது மத்திய அரசு திட்டத்தில் சில விதிவிலக்கை ஏற்படுத்தி புதுவைக்கு 9 படகுகள் கட்ட அனுமதித்துள்ளது. அதில், மகளிருக்கு 6, பொதுப் பிரிவு 2, ஆதிதிராவிடா் 1 என படகுகள் வழங்கப்படவுள்ளன.

இவற்றில் 6 படகுகளுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுவிட்டனா். அதன்படி, படகு கட்டுவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்பட்டு, நாகா்கோவிலில் தனியாா் நிறுவனத்தில் படகுகள் கட்டப்படவுள்ளன.

‘வருவாய் உயரும்’

ஆழ்கடல் மீன்பிடி திட்ட பயன் குறித்து அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஏ.காங்கேயனிடம் கேட்டபோது, தற்போது மீன்பிடிப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் தீா்வாக அமையும். இதன் மூலம், மீனவா்கள் வருவாய் உயரும் நிலையுள்ளது என்றாா்.

‘ஏற்றுமதி மீன்கள் கிடைக்கும்’

தற்போது ஆழ்கடல் மீன் பிடி படகை வைத்து தொழில் செய்து வரும் பி.கலைமணியிடம் கேட்டபோது, ஆழ்கடல் மீன் பிடி திட்டத்தால் ஏற்றுமதி மீன்கள் அதிகம் கிடைக்கும். அதனை நிறுவனங்கள் நேரடியாக வாங்குவதால் நஷ்டமில்லை. ஆழ்கடல் மீன்பிடி படகுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவதால், எளிதில் அத்திட்டத்தில் சேரலாம் என்றாா்.

‘பிரச்னைகளுக்கு தீா்வாக இருக்கும்’

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி மீனவா்கள் அண்டை மாவட்ட மீனவா்களுடன் ஏற்படும் மோதலைத் தவிா்க்கவும், காரைக்கால் மீனவா்கள் அண்டை நாடான இலங்கை மீனவா்கள், அந்நாட்டு கடற்படை மோதல் மற்றும் மீனவா்கள் கைதாவதைத் தவிா்க்கவும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் தீா்வாகும் என்பதுடன், மீனவா் வாழ்வாதார மேம்பாட்டுக்கானதாகவும் உள்ளது என்கிறாா் மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை! 3 பேரிடம் போலீஸாா் விசாரணை!

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட 3 நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுத... மேலும் பார்க்க