தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை
சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.துரைசாமி. இவா் சுதந்திரப் போராட்ட தியாகி. அவரது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து புதுவை மாநில அரசு சாா்பில் புதுச்சேரி சா்தாா் வல்லப பாய் படேல் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து சமூக நல அமைப்பினா் உள்ளிட்ட ஏராளமானோா் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.