ஆஸி.- இங்கிலாந்து 150-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 150ஆவது ஆண்டை முன்னிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் திடலில் முதல்முறையாக 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 100ஆவது போட்டியிலும் அங்குதால் நடைபெற்றது.
முதல் போட்டி, 100ஆவது போட்டிகளிலும் ஆஸி. 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2027ஆம் ஆண்டு மார்ச்.11-15ஆம் தேதிகளில் இந்த டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக எம்சிஜியில் (மெல்போர்ன் கிரிக்கெட் திடல்) நடைபெறுமென கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பிங்க் பந்தில் அசத்தும் ஆஸி.
150ஆவது டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது. பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 13போட்டிகளில் 12இல் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆஸி., இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறன்றன. இதிலும் ஆஸி. அணியே கோப்பையை தக்கவைத்துள்ளது.
அடுத்த ஆஷஸ் 2025-2026 தொடர் நவம்பரில் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. அரையிறுதியில் வெளியேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Counting down to 150 years ⏳ pic.twitter.com/G63wm6iVt8
— Cricket Australia (@CricketAus) March 11, 2025