செய்திகள் :

ஆஸி. ஓபன்: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற கீஸ்!

post image

ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ் பிரபல வீராங்கனை சபலென்காவை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்தப் போட்டியில் கீஸ் 6-3, 2-6, 7-5 என 2 செட்களில் வென்று ஆஸி. ஓபன் பட்டத்தை வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 2017இல் கீஸ் யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றில் தனது முதல் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.

இறுதிச்சுற்றில் மோதும் சபலென்கா - கீஸ் இதுவரை 6 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, சபலென்கா 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாலும் கீஸ் இறுதிச் சுற்றில் அசத்தினார்.

ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி இரு சீசன்களிலுமே சாம்பியனான சபலென்கா, தற்போது ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் வாய்ப்பினை இழந்தார்.

எம்புரான் டீசர் வெளியீடு!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கு... மேலும் பார்க்க

தேசியக் கொடியேற்றினார் ஆளுநா் ஆா்.என். ரவி - புகைப்படங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு... மேலும் பார்க்க

சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்’ போஸ்டர் வெளியீடு!

இயக்குநர் ராஜு முருகன் - சசிகுமார் படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்விப்படமானதைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கியுள்... மேலும் பார்க்க

ஆஸி. ஓபன்: சின்னர் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை... மேலும் பார்க்க