செய்திகள் :

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

post image

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் பிரிவு ஏ-வில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார். மொத்தம் 9 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார்.

நீரஜ் சோப்ரா தனது சிறந்த நிலையான 90.23 மீட்டரை எட்டத் தவறிய போதிலும், 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார்.

தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மிட் 84.12 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பாரீஸில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவரான தாமஸ் ரோஹ்லர் 79.18 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தைப் பிடித்தார்.

இதையும் படிக்க... ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்

இதயம் நிறைந்தது... பறந்து போ படத்தைப் பாராட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

இயக்குநர் ராம் இயக்கிய பறந்து போ திரைப்படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் பாராட்டியுள்ளார்.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, அஞ்சலி நடித்த பறந்து போ திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வசூலித்த குபேரா!

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் நடிப்பும் பலதரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட... மேலும் பார்க்க

என் படங்கள் திரைக்கு வருவதே போராட்டம்தான்: ராம்

இயக்குநர் ராம் தன் திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, அஞ்சலி நடித்த பறந்து போ திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தந்தைக்கும் மகனுக்கும... மேலும் பார்க்க

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள்!

போதைப்பொருள் வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ... மேலும் பார்க்க

நாக்அவுட் சுற்றில் பிஎஸ்ஜி - இன்டா் மியாமி மோதல்

அமெரிக்காவில் நடைபெறும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), இன்டா் மியாமி அணிகள், அதில் மோதுகின்றன.முன்னதாக குரூப் ‘பி’ ஆட்டங்க... மேலும் பார்க்க

ஜூனியா் தேசிய தடகளம்: தமிழா்களுக்கு 4 தங்கம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் வென்றனா்.ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் ஜே.பாண்டியன் 21.33 விநாடிகளில் இலக்... மேலும் பார்க்க