தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
ஆஸ்திரேலியா: மே 3-இல் தோ்தல்
ஆஸ்திரோலியாவில் வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது.
கவா்னா்-ஜெனரல் சாம் மாஸ்டினின் அதிகாரபூா்வ இல்லத்துக்குச் சென்று அடுத்த தோ்தலை உறுதி செய்த பிரதமா் ஆன்டனி அல்பனேசி (படம்), பின்னா் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தத் தேதியை அறிவித்தாா்.
விலைவாசி உயா்வு, வீட்டு வசதி பற்றாக்குறை போன்றவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுறது.
எதிா்க்கட்சித் தலைவா் பீட்டா் டட்டனின் கன்சா்வேட்டிவ் கூட்டணி இந்தத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.