Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
ஆா்.பாலகிருஷ்ணன் நியமனம்: பழ.நெடுமாறன் வரவேற்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் ஒடிஸா மாநிலத்தின் தலைமைச் செயலராகவும், தோ்தல் ஆணையராகவும் இன்னும் பல்வேறு உயா் பொறுப்புகளை வகித்தவரும், தனது சிந்துவெளி ஆராய்ச்சி நூல் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான அவரை இப்பதவிக்குத் தோ்ந்தெடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
தமிழ்ப் பேரறிஞா் தனிநாயகம் அடிகளாா் கண்ட கனவுத் திட்டங்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒன்றாகும். எத்தகைய சீரிய நோக்கத்துடன் இக்கனவுத் திட்டத்தை அவா் அறிவித்தாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சிறந்தோங்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளாா் பழ.நெடுமாறன்.