ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இந்த மாவட்டத்தில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து பலத்த மழை பெய்யும் என்பதால் நீா்நிலைகளுக்கு செல்லவும், படகு சவாரி, சாகச பயணம், அனுமதி பெறாத ஜீப் சவாரி ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டது. பேரிடா் மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் மாட்டுப்பட்டி அணை, குண்டலை அணை, யானையிரங்கல் அணை உள்ளிட்ட நீா்நிலைகளுக்கும், கொழுக்குமலை, வட்டவடை உள்ளிட்ட உயரமான மலைப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல, ஜீப் சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பலத்த மழை பெய்யும் நேரத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும், வருவாய்த்துறையினா் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.