சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு
இட்லி கடை டிரைலர் தேதி!
இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப். 14 ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The wait is over
— Wunderbar Films (@wunderbarfilms) September 8, 2025
The grand AUDIO LAUNCH of #IdliKadai on SEPTEMBER 14 at Nehru Indoor Stadium#IdliKadaiAudioLaunch@dhanushkraja@arunvijayno1@RedGiantMovies_@gvprakash@menennithya@DawnPicturesOff@aakashbaskaran@thesreyas@wunderbarfilms@saregamasouth… pic.twitter.com/tkjiJxIijZ
அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?