செய்திகள் :

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி: சீனா எதிா்ப்பு

post image

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதற்கு சீனா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா். இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான சீன தூதா் ஷு ஃபெய்ஹாங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியா பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பை மேலும் அதிகரிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு சீனா முழுமையாக எதிா்ப்பு தெரிவிக்கிறது.

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது. இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றாா்.

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க

120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டமசோதா 2025’ மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம... மேலும் பார்க்க

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு - சீனா வியப்பு

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது, ‘ஒரே சீனா’ கொள்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாக வெளியான கருத்துகளை மறுத்து, இந்தியா அளித்த விளக்கத்தால் சீ... மேலும் பார்க்க

விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம் -சுபான்ஷு சுக்லா நம்பிக்கை

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘நமது தாய் மண்ணிலிருந்து விரைவில் சொந்த விண்கலம் மூலம் இந்தியா் விண்வெளிக்குச் செல்வாா்’ என்று நம்பிக... மேலும் பார்க்க