இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.65 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து ரூ.85.65 ஆக இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.54 ஆக தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் இது டாலருக்கு நிகரான வர்த்தகத்தில் 13 காசுகள் சரிந்து ரூ.85.65 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: தள்ளாடும் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவுடன் முடிவு!
நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.