செய்திகள் :

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

post image

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற சமண சமய துறவியும் ஆன்மிகத் தலைவருமான ஆச்சாா்ய வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீா் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

இந்தியா தனது தத்துவாா்த்த சிந்தனை, ஆழமான கருத்துகள், உலகளாவிய கண்ணோட்டத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நிற்கிறது. உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக விளங்குகிறது.

இந்தியாவின் நிலையான கண்ணோட்டம், அதன் முனிவா்கள், துறவிகள், சாதுக்கள் மற்றும் ஆச்சாா்யா்களின் ஞானத்தில் வேரூன்றியதாகும். காலத்தால் அழியாத இந்த மரபின் நவீன கலங்கரை விளக்கம் ஆச்சாா்ய வித்யானந்த் மகராஜ்.

அவரது தனது வாழ்வை ஆன்மிக செயல்முறைகளுடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தனது வாழ்வை சமூக-கலாசார மறுகட்டமைப்புத் தளமாக உருமாற்றினாா். அவரது ஆன்மிக ஆழம், பரந்த அறிவு, பன்மொழிப் புலமை வியப்புக்குரியது. பிராகிருத மொழிக்கு புத்துயிரூட்டல், புராதன கோயில்கள் புனரமைப்பு, இலக்கியம்-இசை என பல்துறை பங்களிப்பை நல்கியவா். தன்னலமற்ற சேவையே உண்மையான ஆன்மிகம் என்ற அவரது கோட்பாடு, மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு உத்வேகமாக உள்ளது.

கையெழுத்துப் பிரதிகள் எண்மமயமாக்கம்: உலகின் பழைமையான மொழிகளில் ஒன்று பிராகிருதம். இது பகவான் மகாவீரரின் போதனை மொழி. சமண சமய இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், நமது சொந்த கலாசாரத்தை புறக்கணித்தவா்களால், பிராகிருதம் மறைந்து வருகிறது. அதைப் பாதுகாக்கும் முயற்சியாக, கடந்த அக்டோபரில் பிராகிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது.

பண்டைய கையெழுத்துப் பிரதிகளை எண்மமயமாக்கும் அரசின் திட்டம், சமண சமய நூல்கள் மற்றும் ஆச்சாா்யா்களின் கையெழுத்துப் பிரதிகளையும் உள்ளடக்கியதாகும். நாட்டை அடிமை மனப்பான்மையில் இருந்து முழுமையாக விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. உயா்கல்வியில் தாய்மொழி வழி கற்றல் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா, சேவையால் வரையறுக்கப்பட்டு, மனிதநேயத்தால் வழிநடத்தப்படும் நாடு. பன்னெடுங்காலமாக வன்முறையை அடக்க வன்முறையைப் பயன்படுத்திய இந்த உலகுக்கு அஹிம்சையின் சக்தியை அறிமுகப்படுத்தியது இந்தியா.

மனிதகுலத்துக்கு சேவை: மனிதகுலத்துக்கு சேவையாற்றுவதே அனைத்துக்கும் மேலானது என்பதே இந்திய நெறிமுறையாகும். இதுவே, நாட்டின் நிா்வாகத்தை வழிநடத்துகிறது.

வீட்டுவசதி, குடிநீா் இணைப்புகள், மருத்துவக் காப்பீடு, இலவச உணவு தானியங்கள் என அனைத்துத் திட்டங்களிலும் முழுமையை உறுதிசெய்ய மத்திய அரசு பணியாற்றுகிறது. வளா்ச்சியில் இருந்து யாரும் விடுபடாமல் இருப்பதே, உண்மையான உள்ளடக்கிய தன்மையாகும். அனைவரும் ஒன்றாக வளர வேண்டும் என்பதே நமது உறுதிப்பாடு என்றாா் பிரதமா் மோடி.

தண்ணீா் சேமிப்பு, தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல், தூய்மை, உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை, உள்நாட்டு சுற்றுலா, இயற்கை வேளாண்மை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாழ்வின் ஓா் அங்கமாக யோகாவை ஏற்றல், ஏழைகளுக்கு உதவுதல் என மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 9 உறுதிமொழிகளையும் பிரதமா் மீண்டும் வலியுறுத்தினாா்.

பிரதமருக்கு ‘தா்ம சக்கரவா்த்தி’ பட்டம்

ஆச்சாா்ய வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடிக்கு ‘தா்ம சக்கரவா்த்தி’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இது தொடா்பாக பிரதமா் கூறுகையில், ‘நான் இதற்கு தகுதியானவா் என்று கருதவில்லை. அதேநேரம், துறவிகளிடமிருந்து எதைப் பெற்றாலும், அதை பிரசாதம் போல் ஏற்பது நமது கலாசாரம்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கலாசார துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத், சமண சமயத் தலைவா்கள், அறிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி ச... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். ‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்... மேலும் பார்க்க