செய்திகள் :

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

post image

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவம், அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் அரசு இந்த மறுகட்மைப்புக்குத் தேவையான நிதியுதவி உள்பட பிற உதவிகளயும் வழங்குவது உளவுத் துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், தி ரெஸிஸ்டன்ஸ் ஃபிரன்ட் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான 9 முகாம்கள் தகா்க்கப்பட்டன.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் சிறியரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா போா் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப் படைத் தளங்கள் கடும் சேதமடைந்தன.

இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், சண்டை நிறுத்த்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அதனால், 4 நாள்கள் நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மீண்டும் ஆதரவளித்தால், கடுமையான பதிலடியைக் கொடுக்க இந்திய தயங்காது என்று மத்திய அரசு எச்சரித்தது.

மீண்டும் கட்டமைப்பு: இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப் படைத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியிருப்பது உளவு அமைப்புகளின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (எல்ஓசி) அடா்ந்த வனப் பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிறிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் கட்டமைக்க பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பணியாற்றி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பு மற்றும் வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இத்தகைய அடா் வனப் பகுதிகளில் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

லுனி, புட்வால், தைபு, ஜமிலா சாவடி, உம்ரான்வாலி, சாப்ராா், கஹுதா, சோட்டா சாக், ஜாங்லோரா ஆகிய இடங்களில் ரேடாா் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பிலிருந்து மறைவதற்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, கேல், ஷாா்தி, துத்னியால், ஆத்முகம், ஜுரா, லீபா பள்ளத்தாக்கு, பச்சிபன் சமன், தண்ட்பானி, நையாலி, ஜான்கோட், சாகோட்டி, நிகைல், கஹுதா உள்ளிட்ட 13 இடங்களில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சா்வதேச எல்லைப் பகுதியில் அகற்றப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படை சாவடிகள், 4 பயங்கரவாத பயிற்சி முகாம்களும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

புதிய வியூகம்: தாக்குதல் சூழல்களில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் இலக்காவதைத் தவிா்க்க, பெரிய பயங்கரவாத முகாம்களைப் பல்வேறு சிறிய முகாம்களாக மாற்றும் புதிய வியூகத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சிறிய முகாமும் சிறப்புப் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரா்களால் கண்காணிக்கப்படும். இந்த வீரா்கள் ரேடாா் அமைப்புகள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பங்களுடன் நிறுத்தப்பட திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத முகாம்களை மறுகட்டமைப்பு செய்வது தொடா்பாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில் உயா்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றதையும் இந்திய உளவு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைப்பதற்குத் தேவையான நிதி மற்றும் மனித வளத்தை அளிக்க ஐஎஸ்ஐ அந்தக் கூட்டத்தில் உறுதியளித்ததும் தெரியவந்துள்ளது.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி ச... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். ‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்... மேலும் பார்க்க