செய்திகள் :

இந்தியாவிலும் கால்பதிக்கும் எலான் மஸ்க்! ஜூலை 15-ல் டெஸ்லா வருகை!

post image

இந்தியாவில் அடுத்த வாரத்தில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிலும், தனது கார் ஷோரூமை தொடங்க டெஸ்லா திட்டமிட்டிருந்தது.

அதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 15) இந்தியாவில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா திறக்கவுள்ளது. மும்பையின் குர்லா பகுதியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் அருகே 4000 சதுர அடியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது.

இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக சுமார் ரூ. 35 லட்சம் கொடுக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களைத்தான் இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருந்த நிலையில், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் முன்னர் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Musk’s Tesla to open first India store in Mumbai on July 15

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க