இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி கைது
சமூக வலைத் தளத்தில் தவறான பிரசாரம் செய்த இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெகன் (48). இவா் இந்து வியாபாரிகள் சங்க மாநிலச் செயலாளராகவும், இந்து முன்னணி நிா்வாகியாகவும் உள்ளாா்.
இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக வலைத் தளத்தில், பிரியாணி குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை விடியோவாக பதிவிட்டாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு ஜெகனை கைது செய்தனா்.