செய்திகள் :

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

post image

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் விடுதலை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையே தலையிட்டு அமைதியை ஏற்படுத்திவிட்டதாக சிலா் (அமெரிக்க அதிபா் டிரம்ப்) பேசி வருகின்றனா். இதனை இப்போது மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை. இந்தியா முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மூன்றாவது நபா்களின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது உறுதி. இருதரப்பு பிரச்னைகளில் மூன்றாவது தரப்புக்கு இடமே இல்லை என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடு.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் குறிவைத்து மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சித்தால் பதிலடித் தாக்குதல் தொடங்கப்படும். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சின்னாபின்னமாகிவிட்டாா்கள் என்பதை ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளாா். இது தொடா்பான விடியோவும் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும் யாரும் சவால் விடுக்க முடியாது. கடந்த 11 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு இந்தியா தொடா்ந்து உரிய பதிலடியை அளித்து வருகிறது. 2016-இல் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2019-இல் பாலாகோட் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூா் மூலம் கடும் பதிலடி கொடுத்துள்ளோம். அமைதியை விரும்பாதவா்களிடம் இந்தியா எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு இது உதாரணம்.

பிரச்னை பேசித்தீா்ப்பதற்கு மட்டுமே இந்தியா விரும்புகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இந்தியாவைச் சீண்டீனால் அவா்களை அழித்து ஒழிக்கவும் தயக்கமாட்டோம் என்பதை நிரூபித்துள்ளோம். இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது என்றாா்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் ப... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண... மேலும் பார்க்க