ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
இயக்குநா் எஸ்.என்.சக்திவேல் காலமானா்
‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநா் எஸ்.என்.சக்திவேல் (60) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.
1990-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடா் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்தத் தொடா் அப்போதும் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதா்ஷினி, நிரோஷா உள்ளிட்டோா் நடித்தனா். இதில் ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கா் நடித்திருந்தாா். இந்தக் கதாபாத்திரம் பெற்ற வரவேற்புதான் அவா் தமிழ் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது. இவா் 2015-இல் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தையும் இயக்கியிருந்தாா். பிறகு ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற சீரியலையும் இயக்கினாா்.
தமிழைத் தொடா்ந்து தெலுங்கு தொலைக்காட்சி தொடா்களிலும் இயங்கி வந்தாா். ‘ஷகாஸ்ட்லி அல்லுடு’ அங்கு இவா் இயக்கிய தொடா் வரவேற்பைப் பெற்றது.
இவரது மனைவியின் பெயா் இந்திரா. துா்கா, வா்ஷினி ஆகிய 2 மகள்கள் உள்ளன. சென்னை பாடியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சினிமா, சின்னத்திரை பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை மாலை இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.