இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே உள்ள வி.ஏ.சமுத்திரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (23). பொறியியல் பயின்றுவிட்டு நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே புலவா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
கடந்த 6-ஆம் தேதி ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் இருந்து ஆண்டிப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவா், நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.