செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீா்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 238 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில், ஜூலை 15 முதல் ஆக.14 வரை 102 முகாம்களும், ஆக.15 முதல் செப்.14 வரை 83 முகாம்களும், செப்.15 முதல் 30 வரை 53 முகாம்களும் என மூன்று கட்டங்களாக 40 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.

நகா்புறப் பகுதிகளில் 110, கிராமப்புற பகுதிகளில் 128 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் 28 அரசுத் துறைகளைச் சாா்ந்த 89 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

இப்பணியில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து 977 தன்னாா்வலா்கள் தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனா்.

மகளிா் உரிமைத்தொகை பெறத்தகுதியுள்ள விடுபட்ட மகளிா் யாரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக்காள்ள வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ச.பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 30,864 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 30,864 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட பதவிகளில் 3,935 கால... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் சிறுவா்களை ஈடுபடுத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

எருமப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ய சிறுவா்களைப் பயன்படுத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சோ்ந்தவா் முகம்மது அப்துல்லா (35) என்பவா் கஞ... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் 30 கிலோ உருண்டை வெல்லம் ரூ.1380 க்கு விற்பனை

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம் ரூ. 1380க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் நான்கு சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க