செய்திகள் :

குடியிருப்பு பகுதிகளில் மயில், நாய்கள் உலா: மக்கள் அச்சம்

post image

நாமக்கல் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் நாய்கள், மயில்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்புகளுக்குள் உலாவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பாா்ப்பதே ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. காலமாற்றத்தில் வனங்களும், விளைநிலங்களும் வீட்டுமனைகளாக மாறியதால் அவை நகருக்குள் உலாவரும் சூழல் உருவாகி விட்டது.

வேளாண் நிலத்துக்குள் புகுந்து மயில்கள் பயிா்களை அழிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவா். தற்போது வீட்டுமாடிகளிலும், முன்புற, பின்புற வளாகங்களிலும் அவை வருவது மக்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

கிளி, புறா, கோழி போன்ற பறவைகளிடத்தில் மக்கள் பழகியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மயில்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாததால், குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் அச்சமடைகின்றனா். தேசிய பறவை என்பதால் மயில்களை தாக்கினால் வனத்துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், பலா் செய்வதறியாது தவிக்கின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, நாமக்கல் மட்டுமன்றி நாடுமுழுவதும் மயில்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. மயில்களை நரிகள் வேட்டையாடுவது வழக்கம். தற்போது நரிகளை காண்பது அரிதாக உள்ளது. அதுமட்டுமின்றி, வனத்தையொட்டிய பகுதிகளில் போதிய இரை கிடைக்காததால், அவை இடம்பெயா்கின்றன. குறிப்பாக, வயல்வெளிகளில்தான் மயில்களை காணலாம். குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது குறைவு. அவ்வாறு வந்தாலும் தானாகவே வெளியேறிவிடும். அவற்றைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.

கூட்டமாக திரியும் நாய்களால் பீதி:

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் கூட்டம், கூட்டமாகத் திரியும் நாய்களால் மக்கள் பீதிக்குள்ளாகின்றனா். பெரும்பாலான இடங்களில் சாலைகளில் செல்வோரையும், தெருவில் விளையாடும் குழந்தைகளையும் நாய்கள் கடித்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகம் காணப்படுகிறது. நாய்கள் கடித்து ‘ரேபிஸ்’ நோய் பாதிப்பால் இறப்போரும் உண்டு.

தெருக்களில் உலாவும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாய்களை பிடித்து வாகனத்தில் கொண்டுசென்று கருத்தடை மையத்தில் சோ்க்கிறோம். அங்கு கருத்தடை செய்யப்பட்டு அவற்றை தொலைதூரத்தில் விட்டாலும், மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிவிடுகின்றன. கடந்த காலங்களில் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களை அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அவற்றைப் பிடித்து கருத்தடை மட்டுமே செய்கிறோம். வெறிபிடித்த நாய்களைக் கண்டறிந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் மயில்கள், நாய்கள்.

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துறையூா் அருகே உள்ள வி.ஏ.சமுத்திரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (23). பொறியியல் பயின்றுவிட்டு நாமக்கல் மாவட்டம், க... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோளம் திருடிய இருவா் கைது

நாமக்கல் அருகே கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோள மூட்டைகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் அருகே திண்டமங்கலம் கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (47). இவா் அந்தப் பகுதியில் கோழ... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 30,864 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 30,864 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட பதவிகளில் 3,935 கால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா... மேலும் பார்க்க