இரும்பேடு-மைனந்தல் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு-மைனந்தல் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு திங்கள்கிழமை அகற்றப்பட்டது.
இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாததால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தினமணியில் கடந்த 4-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து, ஆரணி வட்டாட்சியா் கௌரி சம்பந்தப்பட்ட கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டது. முதல்கட்டமாக 300 அடி தொலைவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.