சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
இலங்கை உள்ளாட்சித் தோ்தல்: மசோதா நிறைவேற்றம்
கொழும்பு: இலங்கையில் தடைப்பட்டுள்ள உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2023-இல் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இருந்தாலும், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தோ்தலை அப்போதைய அரசு நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், பழைய வேட்புமனுக்களை செல்லாததாக்கி, புதிதாகத் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.