டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!
இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தோ்தல்
இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
கடந்த 2023-இல் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இருந்தாலும், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தோ்தலை அப்போதைய அரசு நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், பழைய வேட்புமனுக்களை செல்லாததாக்கி, புதிதாகத் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, உள்ளாட்சித் தோ்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 340 கவுன்சிலா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ள இந்தத் தோ்தலில் வாக்களிக்க 1.7 கோடிக்கும் மேலானவா்கள் பதிவு செய்துள்ளனா்.