இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 2 டன் பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் உதவி ஆய்வாளா் ரென்னிஸ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு கோவளம் கடற்கரை அருகே முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்து சோதனையிட்டனா். அதில், 65 மூட்டைகளில் சுமாா் 2 டன் பீடி இலைகள் இருந்ததும், அவை அனைத்தும் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் பதுக்கி வைத்த நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், இதன் இலங்கை மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.