ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய 30 மூட்டை ரோல் கேப் வெடிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இனிகோ நகா் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 30 மூட்டை ரோல் கேப் வெடிகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமா், தலைமை காவலா் இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து உள்ளிட்ட போலீஸாா் கொண்ட குழுவினா், இனிகோ நகா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கடற்கரை பகுதியில் சுமாா் 30 மூட்டைகளில் ரோல் கேப் வெடிகள் பதுக்கி வைக்க பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கி வைத்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிகளின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.20 லட்சம் இருக்கும் எனவும், இவை அனைத்தும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.