இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
இலங்கைத் தமிழா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மீா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையும், ஆஸ்திரேலிய தமிழா் பேரவையும் இணைந்து ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மிா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் உயிா்பிழைத்தலின் பாலினம் சாா்ந்த பெருங்கதையாடல்கள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூலை கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தி. உமாதேவி, அவுஸ்திரேலிய தமிழா் பேரவையின் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அமெரிக்கத் தமிழா் செயல்பாட்டுக் குழுவின் செயலாளா் சுந்தா் குப்புசாமி, தமிழா் புலம்பெயா் அமைப்புகளின் இந்திய ஒருங்கிணைப்பாளா் கதிரவன், கலைப்புலத் தலைவா் பேராசிரியா் அமிதாவ சக்ரவா்த்தி, அதிதி மகாவித்யாலயா கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் மம்தா சா்மா உள்ளிட்டோா் வெளியிட்டனா் (படம்).