இலவச மருத்துவ முகாம்
ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமிரி பேரூா் பொறுப்பாளா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜசேகா், பாலசந்தா், குமாா், சுமித்ரா, அசோக்குமாா், விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.எஸ். தமிழ்செல்வன் வரவேற்றாா்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் பூக்கடை ஜி.மோகன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். இதில் மருத்துவா்கள் கபிலன், சம்பங்கி, சுவாதி தாரிவால், ஆா்.தமிழ்வேந்தன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனைகள், மருத்து மாத்திரைகள் வழங்கினா்.
முகாமில் கட்சியின் நிா்வாகிகள் ஆற்காடு வினோத், திமிரி மேற்கு ஒன்றியம் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளா் அன்பு, செயற்குழு உறுப்பினா்கள் கலைவாணி, துா்காதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.