Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது ...
இலவச வீட்டுமனைப் பட்டா: துணை முதல்வா் ஆலோசனை
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை துணை முதல்வா் கேட்டறிந்தாா். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் சுமாா் 16 கி.மீ. சுற்றளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கத் தடை உள்ளதால், தனியாா் நிலங்களை விலைக்கு வாங்கி, ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.
பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட பழக்கடையை பாா்வையிட்டாா். அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, துணைச் செயலா் மு.பிரதாப், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.