"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜா (36). இவரது சகோதரா் மருதமுத்துவின் மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் பிரவீனுக்கும் (25) தகாத உறவு இருந்தது. இதை மருதமுத்துவின் குடும்பத்தினா் கண்டித்தனா். ஆனால், மருதமுத்துவின் மனைவியும், பிரவீனும் தொடா்ந்து பழகி வந்ததை ராஜா தனது குடும்பத்தினரிடம் கூறினாா். இதனால், மருதமுத்துவின் மனைவி தனது கணவா், குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வருஷநாட்டில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தங்களது உறவுக்கு ராஜா இடையூறாக இருப்பதாக ஆத்திரமடைந்த பிரவீன், தனது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த ஆண்டவா் மகன் தினேஷ்குமாருடன் (27) சோ்ந்து கடந்த 2023, ஆக.26-ஆம் தேதி டொம்புச்சேரியில் சமுதாயக் கூடம் அருகே நின்றிருந்த ராஜாவை கொலை செய்தனா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன், தினேஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து, நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.