இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கூடல்புதூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஜே.ஜே. நகரை சோ்ந்தவா் ஹரிஹரன் (26). வண்ணம் பூசும் பணியாளரான இவா், கோமதிபுரத்தைச் சோ்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளுக்குச் சென்று வந்தாா். இதற்கு இவரது மனைவி எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இதனால், இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி அட்சயா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த ஹரிஹரன் வீட்டு மாடியில் உள்ள தனது அறையில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.