செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர்ப் பதற்றம்; போனில் பேசிய புதின்... என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

post image

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறந்த நாள். அவரது நண்பரான ரஷ்ய அதிபர் புதின், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"ரஷ்ய அதிபர் புதின் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற காலையில் போன் செய்திருந்தார். மேலும், முக்கியமாக அவருக்கு நன்கு தெரிந்த ஈரான் குறித்தும் பேச அழைத்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ரஷ்யா/உக்ரைன் குறித்து குறைவாகத் தான் பேசினோம். அது குறித்து அடுத்த வாரம் பேசுவோம்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள்

திட்டமிடப்பட்டப் படி, பணயக் கைதிகள் மாற்றத்தை அவர் செய்து வருகிறார். இரு பக்கங்களிலும் இது நடந்து வருகிறது. இந்த போன்கால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு நீண்டது. அவர் இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான், 'அவருடைய போரும்' நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினேன்."

உலகில் ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது போர்ப் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

``Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு" - சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று. நாதக'வின் உழவர் பாசறை சார்பில்... மேலும் பார்க்க

"ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்"-அன்புமணி பேச்சு

முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் 'கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்' என்று அறிவித்து தனது மகன் அன்புமணி... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

'ஆபரேஷன் ரைஸிங் லயன்' என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்கு... மேலும் பார்க்க

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

'கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்' என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்... மேலும் பார்க்க

பாமக: வடிவேல் இராவணன் நீக்கம்; பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர்- ராமதாஸ் உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். அன்புமணி, ராமதாஸ்விழ... மேலும் பார்க்க