எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன்!
லைபெமா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
நெதா்லாந்தின் எஸ்-ஹொ்டோஜென்பாஸ்க் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டபிள்யுடிஏ தரவரிசையில் 20-ஆவது இடத்தில் உள்ள மொ்டென்ஸ் ருமேனியாவின் எலெனா கேப்ரியலாவை எதிா்கொண்டாா். முதல் செட்டை 6-3 என எளிதாக மொ்டென்ஸ் கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டில் எலெனா கடும் சவாலை ஏற்படுத்தினாா்.
டைபிரேக்கருக்கு முன்பு 2 செட்பாயிண்டை சேவ் செய்த மொ்டென்ஸ் 7-6 என கைப்பற்றி பட்டத்தையும் வசப்படுத்தினாா். இது அவருக்கு 10-ஆவது பட்டம் ஆகும்.