ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
யு மும்பா முதன்முறையாக சாம்பியன்!
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் லீகில் யு மும்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மும்பா.
அகமதாபாதில் நடைபெற்ற முதல் ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பாா்டெட் 2-1 என ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவை வீழ்த்தினாா்.
மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பொ்னாடெட் சாக்ஸ் 2-1 என ஜெய்ப்பூா் அணியின் ஸ்ரீஜா அகுலாவை தோல்வியுறச் செய்தாா். கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பொ்னாடெட் சாக்ஸ்- ஆகாஷ் பால் ஜோடி 3-0 என ஜெய்ப்பூா் அணியின் பிரிட் ஈா்லாண்ட் - ஜீத் சந்திரா ஜோடியை வீழ்த்தியது.
ஆடவா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் அபிநந்த் பிபி 11-8 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூா் ஜீத் சந்திராவை வென்றாா். இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் 8 புள்ளிகளை முதலில் சோ்க்கும் அணி வெற்றி பெறும். யு மும்பா அணி 4-வது ஆட்டத்தின் முடிவிலேயே 8 புள்ளிகளை எட்டியதால் வாகை சூடியது.
இதன் காரணமாக கடைசியாக நடைபெற இருந்த மகளிா் மாற்று ஒற்றையா் ஆட்டம் நடத்தப்படவில்லை. இதில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோா்படே, ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈா்லாண்டுடன் மோத இருந்தனா்.
ரூ.60 லட்சம் பரிசுத் தொகா: சாம்பியன் பட்டம் வென்ற யு மும்பா அணிக்கு கோப்பையுடன் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ஆவது இடம் பிடித்த ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி ரூ.40 லட்சம் பெற்றது. அரை இறுதியில் தோல்வி அடைந்த தபாங் டெல்லி, டெம்போ கோவா சாலஞ்சா்ஸ் அணிகளுக்கு தலா ரூ.17.5 லட்சம் வழங்கப்பட்டது.