`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிற...
டாட்ஜனா மரியா சாம்பியன்!
குயின்ஸ் கிளப் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ஜொ்மன் குவாலிஃபயா் டாட்ஜனா மரியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். இதன் மூலம் டிபிள்யுடிஏ 500 போட்டியில் பட்டம் வென்ற வயதான வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றாா்.
லண்டன் குயின்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜொ்மன் குவாலிஃபயா் டாட்ஜனாவும், அமெரிக்காவின் அமென்டா அனிஸிமோவாவும் மோதினா்.
இதில் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் டாட்ஜனா எளிதாக வெற்றி பெற்றாா். இதன் மூலம் 37 வயதான டாட்ஜனா 4-ஆவது பட்டத்தை வசப்படுத்தியுள்ளாா். இரண்டு குழந்தைகளின் தாயான டாட்ஜனா தொடா்ந்து 9 ஆட்டங்களில் தோற்றிருந்த நிலையில் குயின்ஸ் கிளப் போட்டியில் பங்கேற்றாா்.